பிரியங்கா சடலமான பின்னும் வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன்! வெளிவரும் பகீர் தகவல்.. கொடூரன்களின் முதல் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஷிவா மற்றும் சின்ன கேசவலு ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவர்.

நால்வரும் காவல் நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சரான நிலையில் அதை நான்கு குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஷிவா எடுத்து கொண்டு பஞ்சர் ஓட்ட எடுத்து சென்றான்.

இந்த நிலையில் தான் பிரியங்காவை அந்த கொடூரர்கள் ஒரு அறைக்கு தூக்கி சென்று வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி சீரழித்துள்ளனர்.

பின்னர் அவரை கொலை செய்துள்ளனர், அந்த சமயத்தில் பஞ்சர் ஒட்டிவிட்டு ஷிவா வந்தான்.

அப்போது சடலமாக கிடந்த பிரியங்காவை ஷிவா வன்புண்ர்வு செய்துள்ளான். இதன் பின்னரே பிரியங்கா பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...