உங்க மகள் எவன்கூடயாவது ஓடிருப்பா: பதறிய பிரியங்கா பெற்றோரிடம் பொலிஸார் அலட்சியம்

Report Print Vijay Amburore in இந்தியா

கால்நடை மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு பதியாமல் அலட்சியம் காட்டிய மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா கடந்த 27ம் திகதியன்று இரவு, வீடு திரும்ப தாமதமாகியுள்ளது.

இறுதியாக செல்போனில் பேசிய அவர், தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதாகிவிட்டதாகவும் ஆள்நடமாட்டா இல்லாத பகுதியில் இருப்பதால் பயமாக இருப்பதாகவும் தன்னுடைய சகோதரியிடம் கூறியுள்ளார்.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆவ் செய்யப்பட்டிருந்துள்ளது.

மகள் காணாமல் போனதை அடுத்து பதறிப்போன பிரியங்காவின் பெற்றோர் உடனடியாக பொலிஸ் நிலையம் விரைந்து புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதனை வழக்காக பதிய மறுத்த பொலிஸார், உங்கள் மகள் வேறு யாருடனாவது ஓட்டம் பிடித்திருப்பாள் என்று அலட்சியமாகவும், முரட்டுத்தனமாகவும் பேசியுள்ளனர். அப்படி எல்லாம் எங்களுடைய மகள் இல்லை என காணாமல் போன இடம் முதற்கொண்டு குறிப்பிட்டு பிரியங்காவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியதை பொலிஸார் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று பொலிஸாரை சைபராபாத் பொலிஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பணியாளர்கள்: எம்.ரவி குமார், சப்-இன்ஸ்பெக்டர், ஷம்ஷாபாத் காவல் நிலையம், பி வேணு கோபால் ரெட்டி மற்றும் ஏ சத்தியநாராயண கவுட், இருவரும் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (RGIA) காவல் நிலைய தலைமை கான்ஸ்டபிள்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்