பிரியங்கா மரணத்தை தொடர்ந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு பெண் யார்? சிசிடிவியால் தெரிந்த உண்மை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பிரியங்காவின் மரணத்தை தொடர்ந்து 35 வயது பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரின் மரணம் குறித்து பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக் கிழமை நான்கு பேர் கொண்ட நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் உச்சகட்ட தண்டனையாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர், இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பிரியங்கா ரெட்டி இறந்து கிடந்த தொலைவில் இருந்து சற்று தூரம் Shamshabad பகுதியில் 35 வயது பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

ஒரே நாளில் இரண்டு பெண்கள் உடல் கருகி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிரியங்கார் ரெட்டி விவகராம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இப்படி ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர், அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்தனர்.

அப்போது இறந்ததாக புடவை கட்டிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட பெண், அதே புடவையில் அங்கிருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டு, திரும்பிய அந்த பெண்ணின் கையில் ஒரு பிளாஸ்டிக் பை, மண்ணெண்ணய் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.

அதன் பின் அப்பெண் தன்னைத் தானே தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமின்றி அப்பெண்ணை கோவிலில் பார்த்த நபர், அவர் கோவிலின் உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசார் இது தற்கொலை என்று தெரிவித்திருப்பதாகவும், இருப்பினும் அப்பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்