சிதைந்த நிலையில் கிடந்த காதல் ஜோடியின் சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் வேலை செய்து வந்த கேரளா காதல் ஜோடியின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் மோகன் (25) மற்றும் ஸ்ரீலட்சுமி (21) என்கிற காதல் ஜோடி, பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தனித்தனி விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் பொறுமையாக பேசி வீட்டில் பெற்றோர்களை சம்மதிக்க வைக்கலாம் என முயற்சித்தாலும், ஸ்ரீலட்சுமியின் மாமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் கடந்த அக்டோபர் 9ம் திகதியன்று தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, விடுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்ரீலட்சுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், பல முயற்சிகள் செய்தும் காதல் ஜோடி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

நவம்பர் 23ம் திகதியன்று தன்னுடைய மாமாவிற்கு போன் செய்த ஸ்ரீலட்சுமி, 'இதுவரை எங்களுக்கு தொல்லை கொடுத்ததற்கு நன்றி. இனிமேல் எங்களால் உங்களுக்கு தொல்லை இருக்காது' எனக்கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இந்த நிலையில் 29ம் திகதியன்று கிராமப்புறம் அருகே உள்ள மரம் ஒன்றில், இருவரின் சடலமும் சிதைந்த நிலையில், தூக்கு கயிற்றில் தொங்கியுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...