குழந்தைகளின் கண்முன்னே மனைவி மற்றும் மைத்துனியை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்

Report Print Vijay Amburore in இந்தியா

தனது இரு குழந்தைகளின் கண்முன்னே மனைவி மற்றும் மைத்துனியை சுட்டுகொன்றுவிட்டு இராணுவ வீரரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பணியமர்த்தப்பட்ட 33 வயதான விஷ்ணு குமார் சர்மா என்கிற இராணுவ வீரர் இன்று காரில் சென்றுகொண்டிருந்த போது தனது மனைவி தமானி மற்றும் மைத்துனி டிம்பிள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக துணை பொலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விஷ்ணு தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். டெங்கு பாதிப்பு ஏற்பட்டதிலிருந்தே அவருடைய நடவடிக்கையில் மற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சிகிச்சைக்காக தங்கள் கிராமத்திலிருந்து பாட்னாவுக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர்.

விஷ்ணுவின் இரண்டு மகன்கள் தங்கள் தாய்வழி தாத்தாவுடன் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது விஷ்ணுவிற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு முதலில் மைத்துனி, அதனை தொடர்ந்து மனைவியை சுட்டுகொன்றுவிட்டு தானம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தமானியின் தந்தை உடனடியாக காரை நிறுத்தி அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, விஷ்ணுவின் அடையாள அட்டை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார், விஷ்ணுவின் 7 வயது மகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்