உணவு சாப்பிட வர மறுத்த மாணவி: அறைக்கு திரும்பிய தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

பல்கலைக்கழக விடுதியில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மைதிலி(23) என்கிற மாணவி பிஎஸ்சி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

நேற்றைய தினம் கல்லூரி முடிந்து விடுதி திரும்பிய மைதிலி யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இரவு உணவு சாப்பிட அறைத்தோழிகள் அழைத்தும் கூட செல்ல மறுத்துள்ளார்.

பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய மாணவிகள், மைதிலி தூக்கில் தொங்குவதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக இந்த தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும், பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மைதிலியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...