இவை அவளுடைய மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் மூன்று: பிரியங்காவின் இதுவரை வெளிவராத மறுபக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலங்கானாவில் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகி எரித்துக் கொல்லப்பட்ட இளம் மருத்துவர் பிரியங்கா ரெட்டி தொடர்பில் அவரது உறவினர் வெளியிட்ட தகவல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஐதராபாத்தில் லொறி சாரதி உள்ளிட்ட நால்வரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் வெளிவராத மறுபக்கம் தொடர்பில் அவரது நெருங்கிய உறவினர் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

செல்லப்பிராணிகள், புத்தகங்கள், குடும்பம் இவை மூன்றுமே பிரியங்காவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி தருணங்கள் என குறிப்பிட்டுள்ள அவர்,

பிரியங்காவின் உடல் தான் கருகிய நிலையில் கைப்பற்றப்பட்டதாக இதுவரை தங்களால் நம்பவே முடியவில்லை என கண்கலங்கியுள்ளார்.

பிரியங்காவின் மரணத்திற்கு பிறகு விசாரணைக்காக வந்த ஒரு அதிகாரி தம்மிடம் பெயர் கேட்டதாகவும், ஆனால் ஒருகணம் அதையே யோசிக்க வேண்டி வந்தது என கூறும் அவர்,

சொந்த பெயர் கூட மறந்து போகும் அளவுக்கு துயரம் தங்களை தின்று கொண்டிருக்கிறது என வேதனைப்பட்டுள்ளார்.

பிரியங்காவின் தாயாரையும் சகோதரியையும் என்ன கூறி ஆறுதல் படுத்துவேன் என தெரியவில்லை என கூறும் அவர்,

துக்கம் விசாரிக்க வரும் பலரும், தங்களுக்கு நீதி கிடைக்கும் என கூறுகின்றனர். எந்த நீதி இனி தங்களுக்கு கிடைக்கும் என தெரியவில்லை என கூறும் அவர்,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் இருந்து இதுவரை எதுவும் இந்தியாவில் மாறிவிடவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகள் என்றால் பிரியங்காவுக்கு கொள்ளைப் பிரியம். அதுவே அவளுக்கு பொது மருத்துவம் கிடைத்தும் கால்நடை மருத்துவத்தை தெரிவு செய்ய தூண்டியது.

தெருநாய்க்களை கூட உணவு தந்து பராமரித்து வந்த பிள்ளையயே அந்த கொடூரர்கள் சீரழித்து கொன்றிருக்கிறார்கள்.

மிகவும் எளிமையான விவசாய குடும்பம் பிரியங்காவுக்கு. வருவாய் மொத்தமும் அவளின் மருத்துவ செலவுக்கு தந்து, சின்னதாய் ஒரு குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

வேலை கிடைத்ததும், மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரியங்கா தாயாருக்கும் சகோதரிக்காகவும் புதிய வீடொன்றை வாங்கி அங்கே குடியேறியுள்ளார்.

பொதுவாக திருமணமாகாத இளம்பெண் ஒருவர் எங்கள் சாதியில் மரணமடைந்தால், இறுதிச் சடங்குக்கு முன்னர், ஓங்கி வளர்ந்த மரம் ஒன்றுடன் திருமண சடங்கு ஒன்றை நடத்துவார்கள்,

ஆனால் இப்போது அந்த சடங்கை கூட தங்களால் நடத்த முடியாமல் போயுள்ளது என கண்கலங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்