பள்ளத்தில் உயிருக்கு போராடும் சிறுவன்: மீட்பு நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 15 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவனை மீட்கும் நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் கழிவு நீர் ஓடைக்கான குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் சிறுவன் ஒருவன் ஒருவன் சிக்கியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த மூன்று தீயணைப்பு வீரர்கள் 15 ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் அதில் விஷால் யாதவ் என்ற தீயணைப்பு வீரர் சிக்குண்டு மரணமடைந்துள்ளார். மேலும், சிறுவனை அந்த குழியில் இருந்து இதுவரை மீட்க முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஞாயிறன்று மாலை வேளையில், கழிவு நீர் ஓடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த விஷால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, அந்த 15 அடி ஆழம் கொண்ட குழிக்குள் இறங்கியுள்ளது.

இதில் அந்த மூவரும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த மூவரையும் எற்கெனவே சிக்கியுள்ள சிறுவனையும் மீட்கும் பணி துவங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த தீவிர மீட்பு நடவடிக்கையில் இரு தீயணைப்பு வீரர்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால் விஷால் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்போது தேசிய மீட்பு குழுவினரின் தலைமையில் சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்