பிரியங்கா கொலையை தொடர்ந்து அவர் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு! வீட்டு வாசலில் எழுதப்பட்டுள்ளது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

மகளை பறிகொடுத்து விட்டு தவிக்கும் பிரியங்கா ரெட்டியின் பெற்றோர் தங்களுக்கு அனுதாபம் தேவையில்லை, நீதி தான் வேண்டும் என கூறும் நிலையில் அது தொடர்பில் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரியங்காவின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்காக பல அரசியல் பிரபலங்கள் அவர்கள் வீட்டுக்கு படை எடுக்கின்றனர்.

ஆனால் ஆறுதல் கூறுவதாக அரசியல்வாதிகள் தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்கின்றனர் என பிரியங்காவின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதை தொடர்ந்து அரசியல்வாதிகள், ஊடகத்தினர், பொலிஸ் ஆகியோரை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர் பிரியங்காவின் பெற்றோர்.

மேலும் தங்கள் வீட்டுக்கு வாசலில் ஊடகத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் பொலிசாருக்கு அனுமதியில்லை என அறிவிப்பு பலகையில் எழுதி பிரியங்கா பெற்றோர் தொங்கவிட்டுள்ளனர்.

இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் கூறுகையில், எங்களுக்கு யாருடைய அனுதாபங்களும் தேவையில்லை, எங்களுக்கு நீதி வேண்டும், எங்களின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், யூனியன் அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பிரியங்கா பெற்றோரை அவர்கள் வீட்டுக்கு வந்து சந்தித்தனர்.

அதே நேரத்தில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் பிரியங்கா பெற்றோரை சந்திக்க வந்த போது அனுமதி மறுக்கப்பட்டது, இதே போல இனி யாரையும் சந்திக்க போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்