கோவையில் துயரம்..! வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பெண்கள்.. 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

Report Print Basu in இந்தியா

தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் வீடு கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியிருந்த நிலையில். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் நாடூர் கிராமத்தில் கனமழையால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இத்துயர சம்பவம் திங்கட்கிழமை காலை நடந்துள்ளது. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதில், 2 குழந்தைகள், 10 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 15 உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், வீட்டிலிருந்த மூவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 180 மிமீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்