அதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லொறி மோதிய விபத்தில், பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று மதியம் வழக்கம் போல ஊழியர்கள் வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லொறி, அங்கிருந்த சுங்கசாவடியின் மீது மோதியதோடு, சாலையை கடந்து கொண்டிருந்த மற்ற இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சுகுமார் என்பவரின் மனைவி பிரமிளா (51) மற்றும் முன்னாள் இராணுவ வீரரான சென்னப்பன் (61) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சுங்கச்சாவடியில் வரிவசூலில் ஈடுபட்டு கொண்டிருந்த கவிதா (34) படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, படுகாயமடைந்த கவிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சிவக்குமார்(37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடந்த போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்