முதன்முறையாக ஹெலிகாப்டரை பார்த்த கிராம மக்கள்: கொட்டிய ரூ.90 லட்சம் பண மழை!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் மணமகனின் குடும்பத்தினர் ரூ.90 லட்சத்தை பண மழையாக வாரி இறைத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜாவின் திருமணம் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

ஜாம்நகர் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சேலா கிராமத்திற்கு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும் ரூ. 90 லட்சம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் அனைவருமே ஆச்சர்யமாக பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கிராம தலைவர் ராஜேந்திர பட்டி கூறுகையில், இப்பகுதியில் முதன்முதலாக ஒரு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார். இங்கு உள்ள மக்களில் பெரும்பாலானோர் இப்போது தான் முதன்முறையாக ஹெலிகாப்டரை பார்க்கின்றனர்.

பின்னர் அங்கிருந்த மணமகன் அருகாமையில் உள்ள மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, மணமகனின் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் பொதுவில் ரூ .500 மற்றும் ரூ .2,000 நாணயத்தாள்களைப் பொழிந்தனர். எத்தனை நோட்டுகள் பொழிந்தன என்று என்னால் கூற முடியாது, ஆனால் அவை ரூ .35 லட்சம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

அந்த இடத்தில் கலந்து கொண்ட கிராமவாசி தர்மேந்திரசிங் ஜடேஜா, “எனது மதிப்பீட்டின்படி குறைந்தது ரூ .80 லட்சம் மதிப்புள்ள நாணயத்தாள்கள் சேலாவில் மழையாக பெய்தது” என்றார்.

"இந்த சம்பவம் குறித்து நான் கேள்விப்பட்டேன், ஆனால் திருமண நிகழ்வு குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை" என துணை ஆய்வாளர் ஜே டி பர்மர் கூறியுள்ளார்.

மணமகனின் குடும்பம் பாஜகவுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று ஜாம்நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே டி படேல் குற்றம் சாட்டியுள்ளார். "வெளிப்படையாக வீசப்பட்ட பணம் கறுப்புப் பணம். இன்று ஒரு நாளைக்கு சிறிதளவு உணவு கூட கிடைக்காத ஏழை மக்கள் இருக்கும்போது, ​​ஒரு கொண்டாட்டத்திற்கு லட்சத்திற்கு மேல் பணத்தை வீசுவது தவறான முன்மாதிரியாகும் " எனக்கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்