புலிகளின் தலைவர் சீமானை சந்திக்க ஒதுக்கிய நேரம் இவ்வளவு தான்..அதுவும் எதற்காக? பிரபலம் சொன்ன தகவல்

Report Print Santhan in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு விடுதலை புலிகளின் தலைவர் பிரபகாரம் சந்திக்க 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது எனவும் அதில் நான்கு நிமிடம் சோதனைக்கே சென்றிருக்கும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாளின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஈழத்தில் பிராபகரனை சந்தித்து, அதன் பின் அங்கு சாப்பிட்ட உணவுகள் குறித்து உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் இருக்கிறார்கள்.

சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று பிரபாகரன் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தெரிவு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.

பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தான், அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் பிரபாகரனை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்.

இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கை தட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதையும், அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தற்போது கோட்டபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார், நாங்களும் சென்னையில் நடத்தினோம். இவர் எதையுமே செய்யவில்லை, மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்