காதலியுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வைத்து இளைஞன் செய்த மோசமான செயல்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலியியுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி மாணவியை ஆபாச வலையில் சிக்க வைத்த இளைஞரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித் குமார். 19 வயதான இவர் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்குமார் சமீப நாட்களுக்கு முன்பாக தன்னுடன் கொடைக்கானல் பள்ளியில் படித்த தோழியை சந்தித்துள்ளார்.

அந்த பெண் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகமாக்கிக்கொண்ட இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். தனிமையில் இருக்கும் போது வீடியோ காலில் பேசி வந்த இவர்கள் சில நேரங்களில் அந்தரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதை பயன்படுத்திக்கொண்ட அஜித்குமார் மாணவியின் நிர்வாண புகைப்படங்களை தன்னுடைய செல்போனில் சேகரித்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் அஜித் குமாரின் வற்புறுத்தல் காரணமாக மாணவி குளிக்கும் போது எடுத்த வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அஜித்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் பேஸ்புக்கில் மாணவியின் அந்தரங்க புகை படத்தை பகிர்ந்துள்ளார். இதை கண்டு பேரதிர்ச்சி அடைந்த மாணவிக்கு மற்றொரு இடியும் வந்தது. மாணவியிடம் இருந்து பெற்று கொண்ட புகைப்படம் மற்றும் அந்தரங்க வீடியோக்களை அஜித் குமார் தனது நண்பர்களிடமும் பகிர்ந்து உள்ளார்.

இதனால் செய்வதறியாத பெண் தனக்கு நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூற, இதையடுத்து மாணவியின் பெற்றோர் அஜித்குமார் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அஜித்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப், பெண்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன் பிறகு மாணவி சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி பெற்றோர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதாகியுள்ள அஜித் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்