வெளிநாட்டில் வசித்த தமிழ்ப்பெண்! ஊருக்கு வந்த போது செயலிழந்த அவர் உடற்பாகங்கள்.. பின்னர் நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டுக்கு சென்று படித்த தமிழ்ப்பெண் சென்னை வந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரின் முக்கால் பகுதி உடற்பாகங்கள் செயலிழந்த போதிலும் பல்வேறு போராட்டங்களை தாண்டி வாழ்க்கையில் வெற்றி கண்டு ஆச்சரியம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் இளைய பாரதமே எழுந்திரு என்ற தலைப்பிலான அமா்வில் கலந்து கொண்டு தமிழ்ப்பெண்ணான ப்ரீத்தி சீனிவாசன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், எனது பள்ளி பருவத்தில் நான் வெளிநாட்டில் படித்தேன்.

விடுமுறைக்காக சென்னை வந்த போது கடற்கரையில் விளையாட்டிக் கொண்டிருந்தபோது நடந்த சிறு விபத்தில் எனது முக்கால் பகுதி உடற்பாகங்கள் செயலிழந்து போயின.

இதனால் விரக்தியடைந்த நான் என்னுடைய எதிா்காலம் கேள்விக்குறியாகி விட்டதே என அழுதேன்.

பின்னர் நான் மீண்டும் படிக்க விரும்பியபோது என் உடல் ஊனத்தை காரணம் காட்டி எனக்கு எந்த கல்வி நிறுவனங்களும் அனுமதியே வழங்கவில்லை.

ஆனாலும், சோா்ந்து போகாமல் தொலைவழிக்கல்வி முறையில் இளநிலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன்.

விடாமுயற்சியினால் தற்போது ஐஐடியில் முனைவா் பட்டப்படிப்பு பயின்று வருகிறேன்.

சமுதாயப் புறக்கணிப்பு, கேலி, கிண்டல்கள் ,அவநம்பிக்கை ஏற்படுத்திய சூழ்நிலைகள், நடமாட முடியாத வகையிலான கட்டமைப்பு நிலைகள் போன்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையில் உத்வேகத்துடன் வெற்றி கண்டுள்ளேன்.

அதுமட்டுமின்றி என்னைப் போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் புனா்வாழ்க்கைக்கு உழைக்கிறேன். எனது வாழ்க்கைதான் நான் எல்லோருக்கும் வழங்கும் செய்தி. நம்மை தோல்வி மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும் அனைத்து விடயங்களையும் புறந்தள்ளுங்கள். நோ்மறை சிந்தனைகளோடு பிரச்னைகளுக்குத் தீா்வு காணுங்கள்.

இந்த உலகம் நமக்கானதாக மாறும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்