8வது மாடியிலிருந்து குதித்த பெண்கள்... வீட்டிற்குள் கிடந்த 2 சடலங்கள்: சுவரில் தற்கொலை குறிப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

ஒரு ஆண் தன்னுடைய குழந்தைகளை கொலை செய்துவிட்டு மனைவி மற்றும் மேலாளருடன் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகாலை 5.15 மணியளவில் இரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் 8 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை திறந்துபார்த்த போது, இரண்டு குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சுவற்றில் சில 500 ருபாய் தாள்களுடன் தங்களுடைய தற்கொலைக்கு ராகேஷ் வர்மா என்பவர் காரணம் என எழுதப்பட்டிருந்துள்ளது.

பின்னர் இந்த தகவல் அறிந்து வந்த இறந்தவரின் சகோதரர் என்று கூறிக்கொள்ளும் ஹரிஷ், இறந்தவர்கள் குல்ஷன் (45), மனைவி பர்வீன் (43), மேலாளர் சஞ்சனா (38), மகள் கிருத்திகா (18), மகன் ஹிருத்திக் (13) என அடையாளம் கூறியுள்ளார்.

குல்ஷன் ஜீன்ஸ் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்தார். அதில் சஞ்சனா மேலாளராக பணிபுரிந்து வந்தவர். குல்ஷனின் சொந்த மைத்துனரான ராகேஷ் வர்மா செய்த மோசடியால், இவர்களுடைய வியாபாரத்தில் இரண்டு கோடி இழப்பு ஏற்பட்டது.

இதனால் குடும்பம் பெரும் நெருக்கடியை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ராகேஷ் வர்மாவின் வீட்டை அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்