பிரியங்கா வழக்கில் கைதான நால்வரில் ஒருவன் உடலில் உள்ள பிரச்சனை! மருத்துவர்கள் கூறியது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நான்கு பேரில் ஒருவனான கேசவலு சிறுநீரக பாதிப்பு தொடர்பாக தனக்கு சிகிச்சையளிக்க சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளான்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26) லொறி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்கள் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கேசவலு சிறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளான்.

அதாவது, கேசவலுவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்ததால் அவனுடைய ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தான் நிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதைச் சிறையில் தொடர வேண்டும் எனவும் அவன் கேட்டுள்ளான்.

இது குறித்து சிறை அதிகாரி கூறுகையில், குற்றவாளிகளைச் சந்திக்க எந்தக் குடும்பமும் இதுவரை வரவில்லை.

கேசவலு ஒரு வருடமாகவே சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவன் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கேசவலுவின் தாய், என் மகன் தவறு செய்திருந்தால் பிரியங்கா எரிக்கப்பட்டது போல அவனையும் எரித்துவிடுங்கள் என நேற்று முன் தினம் கூறியிருந்தார்.

இதனிடையில் குற்றவாளிகள் நால்வருக்கும் ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

இதனால், நால்வரும் இப்போது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் உதவியைச் சார்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்