மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்து கிடந்த எலி... உத்தரபிரதேச பள்ளிகளில் தொடரும் அவலம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் எலி இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து வழங்கப்பட்டது உட்பட தொடர்ந்து மதிய உணவு திட்டம் விடயத்தில் உத்தரபிரதேச அரசாங்கம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.

அந்த வரிசையில், மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைக் கல்லூரியின் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட மற்றும் பரிமாறப்பட்ட மதிய உணவில் இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டது.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த உணவு, முசாபர்நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஹப்பூரில் அமைந்துள்ள ஜான் கல்யாண் சன்ஸ்தா கமிட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

குறைந்தது ஒன்பது குழந்தைகளும் ஒரு ஆசிரியரும் உணவை உட்கொண்ட பின்னர் நோய்வாய்ப்பட்டனர். தற்போது, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாங்கள் ஒரு கரண்டியால் பருப்பை எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு எலியை கண்டோம் என்று 6 ஆம் வகுப்பு மாணவர் சிவாங் கூறினார். மேலும், நோய்வாய்ப்பட்ட ஒன்பது மாணவர்களைத் தவிர்த்து, மற்ற 15 மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத மாநில அரசு, விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், முசாபர்நகர் மாவட்ட நீதிபதி, இப்பகுதியில் மதிய உணவை கண்காணிக்கும் குழுவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்