பன்றி என நினைத்த நபர்... வீட்டிற்குள் அடைந்திருந்த சிறுத்தை

Report Print Vijay Amburore in இந்தியா

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராம்கிருஷ்ணா கோசாவி என்பவர் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். ஒரு அசைவை கண்டதும் அது பன்றியாக இருக்கலாம் என முதலில் நினைத்துள்ளார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விலங்கு பெரிய சுவற்றின் மீது குதித்து அதிவேகத்தில் ஓடுவதை பார்த்ததும், சிறுத்தை என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து காலை 7.15 மணியளவில் வன அதிகாரிகள் மற்றும் நகர குடிமை அமைப்பின் குழுக்கள் வந்தடைந்துள்ளனர்.

சிறுத்தை தோட்டத்திலிருந்து வெளியேற முயன்ற போது, குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை எழுப்பியதால், காலை 8.15 மணியளவில் காலியாக இருந்த வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்தது.

சுமார் நான்கு மணிநேரமாக அங்கேயே அடைந்திருந்துவிட்டு, பின்னர் மற்றொரு காலியான வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது.

அந்த வீட்டில் வைத்து பிடிப்பது எளிது என்பதால், கதவை தாழ்பாளிட்டு மயக்க ஊசியால் சுட்டுள்ளனர். அதில் சிறிது நேரம் கழித்து சிறுத்தை மயக்கமடைந்ததும், அதனை பிடித்து கூண்டிற்குள் மாற்றியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்