திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கிராமமக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா
134Shares

திருமண ஊர்வலத்தில் பிறப்படுத்தப்ட்ட சமூகத்தை சேர்ந்த மணமகன், தங்களுடைய தெரு வழியாக சென்றதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தர்மேந்திர லுஹர் என்கிற 28 வயது இளைஞர், திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர்களின் தெரு வழியாக சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணமகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மணமகனை குதிரையிலிருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர். இதில் அங்கிருந்த சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அகர் மால்வா மாவட்ட தலைமையகத்திலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ள பத்வாசா கிராமத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்