பசிக் கொடுமையால் மணலை அள்ளி சாப்பிட்ட குழந்தைகள்! அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா
467Shares

இந்தியாவில் பசிக் கொடுமையால் மணல் அள்ளி சாப்பிட்ட குழந்தையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவரது தாயாருக்கு அதிகாரிகள் வேலை வழங்கி உதவியுள்ளனர்.

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு பசிக் கொடுமையால் இரு குழந்தைகள் தரையில் கிடக்கும் மணலை அள்ளி சாப்பிடும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

அதன் பின் இந்த வீடியோ குறித்து திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குழந்தைகளின் தாயார் பெயர் ஸ்ரீதேவி என்பதும், அவரது கணவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதால், 6 குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீதேவியிடம் இருந்து 4 குழந்தைகளை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள இரண்டு குழந்தைகளையும் தாயின் பொறுப்பிலேயே ஒப்படைத்ததுடன், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்தனர்.

மேலும் மாநகராட்சி குடியிருப்பில் வசிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதைக் கண்ட இணையவாசிகள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்