திருமணமான 20 நாட்களில் கலைந்த புதுமணப் பெண்ணின் கனவு: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா
665Shares

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணமான 20 நாட்களில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார் பூர்ணிமா.

இவருக்கும் கார்திக் என்பவருக்கும் ஓராண்டு காதலுக்கு பின்னர் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு பூர்ணிமா தரப்பில் இருந்து பெற்றோரோ உறவினர்களோ எவரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய் அன்று பூர்ணிமா தமது கணவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் குடும்பத்தினர், கார்த்திக் தங்களது மகளை கொன்றுவிட்டு நாடகமாடுவதாக புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பூர்ணிமாவின் உறவினர்கள் சனாத்நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்