நித்தியானந்தா பதுங்கி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு: வெளிவரும் புதிய தகவல்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
851Shares

நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை. அவர் இமயமலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய வீடியோக்கள் அனைத்தும், இமயமலை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரமம் மீது ஆள்கடத்தல், குழந்தைகள் பலாத்காரம், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட புகார்களின் கீழ் அகமதாபாத் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சர்ச்சைகளால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்றும் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், தான் தனித்தீவு வாங்கி விட்டதாகவும், அதை இந்து நாடாக ஆக்கப்போவதாகவும் நித்தியானந்தா தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே இந்த தீவு இருப்பதாகவும், இதை ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவிப்பதற்காக ஐநா சபையிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும், இதற்கான பொறுப்பு அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை. அவர் இமயமலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது சமீபத்திய வீடியோக்கள் அனைத்தும், இமயமலை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஒரு நாட்டில் இருந்து கொண்டு, புதிதாக தனி நாடு கோரிக்கை வைப்பது அல்லது ஏற்படுத்துவது சட்டப்படி தேச துரோகமாகும்.

அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு தேச துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே நித்தியானந்தா மீது தேச துரோக வழக்கு பாயவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்