நீங்கள் அனுபவித்த வலியை நானும் உணர வேண்டும் பிரியங்கா! இளம்பெண் செய்த செயல்... நெகிழ்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
1159Shares

கொடூரன்கள் உங்களை எரிக்கும் போது ஏற்பட்ட உங்கள் வலியை உணர்வதற்காக மெழுகுவர்த்தி முழுவதையும் கையில் ஏந்தினேன் என இளம்பெண்ணொருவர் பிரியங்கா ரெட்டியை நினைத்து உருகியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார்.

இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரியங்கா ரெட்டி உயிரிழந்து நாட்கள் கடந்த போதிலும் பலரும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

மேலும் பல்வேறு இடங்களில் பிரியங்காவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் யானா மிர்சாந்தினி என்ற இளம்பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா ரெட்டி குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள பிரியங்கா ரெட்டி, இந்த மெழுகுவார்த்தியை எந்த தட்டிலும் வைக்காமல் என் கையில் முழுவதும் வைத்து ஏந்தினேன்.

ஏனென்றால் அந்த கொடூர அரக்கர்கள் உங்களை எரிக்கும் போது நீங்கள் அனுபவித்த வலியை நான் உணர வேண்டும் என்பதற்காகே இப்படி செய்தேன், உங்கள் விடயத்தில் மொத்த நாடும் சிந்தும் கண்ணீர்க்கு இந்த முறை விடை கிடைக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்