கர்ப்பமாக இருக்கும், பிரியங்காவை கொன்ற கொடூரனின் மனைவி! குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரின் குடும்பத்தாரின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா
1612Shares

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரின் குடும்பத்தார் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளனர்.

26 வயதான இளம்பெண் பிரியங்கா ரெட்டி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நான்காவது நபர், அருகிலுள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர்களின் குடும்பத்தாரை சந்தித்து பிபிசி செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது.

அதில் ஒரு நபரின் தாய், இரண்டு அறைகள் கொண்ட கூரை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அவருடன் இருந்த கணவர் கூறுகையில், எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நாளைக்கு என் மகளுக்கு இப்படி நடந்தால் நான் அமைதியாக உட்கார்ந்திருக்க மாட்டேன். அதனால்தான், காவல் துறையினர் சொல்லும் செயலை என் மகன் செய்திருந்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்தச் செயலை என் மகன் செய்திருந்தால் அவனுக்காக வாதாட என் பணத்தையோ அல்லது சக்தியையோ செலவிட நான் தயாராக இல்லை என தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொரு நபரின் வீட்டின் முன்பு அவர் தாயும், மனைவியும் இருந்தனர்.

மனைவி கூறுகையில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

நான் ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளேன், பாதிக்கப்பட்டவரும் ஒரு பெண் தான். நான் கவலைப்பட்டேன். என் கணவர் அதைச் செய்தாரா, செய்யவில்லையா என்பது பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆனால், நடந்திருக்கும் சம்பவம் சரியானதல்ல என கூறினார்.

தாய் கூறுகையில், எனது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு அவன் மருத்துவம் பார்த்து வருகிறான்.

இதுபோன்ற ஒரு செயலை என் மகன் செய்திருப்பான் என என்னால் நம்ப முடியவில்லை. யாரோ கட்டாயப்படுத்தி அவனை மது குடிக்க வைத்து இந்த வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் மூன்றாவது நபரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால் செய்தியாளர்கள் சென்ற போது அவர் வீட்டில் யாரும் இல்லை.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்காவது நபர் இந்தக் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார்.

அவருடைய தாயும், தந்தையும் கூறுகையில், எங்கள் மகன் என்ன செய்தான் என தெரியாது.

அவன் வீட்டில் அரிதாகத் தான் தங்குவான். குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய ஒரே ஆள் என்பதால் அவனிடம் அதிகமாக எதையும் நாங்கள் கேட்க மாட்டோம் என கூறினர்.

இதனிடையில் அருகில் வசிக்கும் நபர் கூறுகையில், இப்படியொரு சம்பவத்தில் அவன் ஈடுபட்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தான் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்