முதலில் தூற்றிய ரஜினி- பின் தைரியலட்சுமி என்று ஒருவரை புகழ்ந்தார்! யார் அந்த பெண்மணி?

Report Print Abisha in இந்தியா
147Shares

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நடிகர் ரஜினிகாந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இகழ்ந்துள்ளார்.

ஜெயலலிதா முதலாவது ஆட்சி காலமான 1991 -1996 காலகட்டத்தில் பல சட்டவிரோத நடிவடிக்கைகள் நடந்தேறின. அவற்றில், சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு, ஊழல்கள், சசிகலா குடும்பம் சொந்து குவிப்பு, நில அபகரிப்புகள் நீதிபதி உறவினர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்டவை குறிப்பிடலாம்.

இது தமிழக மக்களுக்கும், பல பிரபலங்களுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

1991சட்டசபை தேர்தலின் போது, ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலையில் ஓட்டுகளை பெற்றார் ஜெயலலிதா.

ஆனால் திரைப்பட நகருக்கு ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ எனப் பெயர் சூட்டப்பட்டதுமே `எம்.ஜி.ஆர் பெயரையோ, சிவாஜி பெயரையோ வைக்க வேண்டும்’ எனத் திரையுலகத்தினர் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ரஜினியின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் ரஜினி. சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு 'செவாலியே விருது வழங்கும் விழா' நடைபெற்றது. அந்த விழாவை ரஜினி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஜெயலலிதா பங்கேற்ற அந்த விழாவில், ''நீங்கள் திறந்து வைத்த ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயரை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அது தவறு. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றைத் திருத்திக் கொள்வது மனிதத்தனம். அந்தத் தவற்றை இப்போது சரி பண்ணிட்டீங்க'' எனக் கொஞ்சம் கேவமாகவே பேசினார் ரஜினி.

ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கைவிடக்கூடப் பலரும் அச்சப்பட்ட காலம் அது. அப்படியான சூழலில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ``யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’’ எனப் பேசிய ரஜினியின் தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள்.

மூன்று மாதங்களுக்குள் பாட்ஷா பட வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியிலும் கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்தார் ரஜினி.

1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தார் ரஜினி. டிவி-யிலும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். அப்போதுதான் ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது'' என்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார்.

credit: vikatan

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2002ஆம் ஆண்டு பாபா படம் ரிலீஸ் ஆனது. அந்த நேரத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி ஜெயலலிதாவை சந்தித்தார் ரஜினி. திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் நிர்ணையிக்க அரசு அனுமதி வழங்கியது.

2004ஆம் ஆண்டில் திருட்டு விசிடி ஒழிக்க ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில், ரஜினி கமல் இணைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சால்வே அணிவித்தனர்.

அதில், பேசிய ரஜினி, ''சமைக்கத் தெரிந்தவனுக்குப் பொண்டாட்டியாகப் போகக் கூடாது. வேலை தெரிந்தவன்கிட்ட வேலைக்காரனாகப் போகக் கூடாது. பேச்சாளர்கள் இருக்கிற இடத்தில் பேசக் கூடாது. ஆனால், நான் கொஞ்சம் பேசத்தான் போகிறேன்'' என பேச்சை துவங்கினார் அவர்.

திருட்டு வி.சி.டி-க்கு எதிரா ஊர்வலம் போகிறோம். கோட்டையில் முதல்வரைச் சந்தித்து மனுக்கொடுக்கலாம்' எனத் திரையுலகத்தினர் சொன்னபோது, 'பிரயோஜனம் இல்லா விசயத்திற்கு நான் வரவில்லை என்றேன்.

credit: vikatan

அதே போல் இந்த விழாவிற்கு நான் வராவிட்டாலும் முதல்வர் தவறாக நினைக்க மாட்டார் எனத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரனிடம் கூறினேன். ஆனால், 'கண்டிப்பாக வர வேண்டும்' என முரளிதரன் வற்புறுத்தினார். இந்த விழாவுக்கு வராவிட்டால் நான் நிச்சயம் சினிமாக்காரனே அல்ல. திருட்டு வி.சி.டி-க்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கையால் திரையுலகை முதல்வர் காப்பாற்றியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்த நேரத்தில் ஜெயலலிதாவை முதன்முதலில் பார்த்தேன். அங்கு வந்த ஜெயலலிதாவின் நடை, கம்பீரத்தைப் பார்த்து நான் அசந்து போய் நின்றேன். அவர் நடந்து வந்தது போலவே நண்பர்களிடம் நடந்து காட்டினேன். அந்தக் கம்பீரம் இன்றும் அவரிடம் இருக்கிறது.

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்னு சொல்லுவாங்க. தைரியலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கீர்த்திலட்சுமி, ஐஸ்வரியலட்சுமினு வரிசையாகச் சொல்லுவாங்க. 'கடவுளிடம் முதலில் எந்த லட்சுமியைக் கேட்கிறது'னு ஒரு கதையில் குருகிட்ட சிஷ்யன் கேட்டான். 'தைரியலட்சுமியை முதலில் கேளு. ஏன்னா தைரியலட்சுமிகூட இருந்தால் மற்ற லட்சுமிகள் தானா வருவார்கள். தைரியலட்சுமி இருக்கிற பக்கம்தான் வீரலட்சுமி, வீரலட்சுமி இருக்கிற பக்கம்தான் விஜயலட்சுமி... இப்படி ஒவ்வொரு லட்சுமியும் தன்னால வருவார்கள். இங்கே ஜெ.ஜெ தைரியலட்சுமி'' என்றார் ரஜினி.

இப்படி போற்றபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள்...

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்