ஈழத்தமிழர்கள் பற்றி கிளாரி கிளிண்டனிடம் 45 நிமிடம் பேசிய ஜெயலலிதா... முதல் முறையாக கூறிய சீமான்

Report Print Santhan in இந்தியா
195Shares

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் ஜெயலலிதாவின் நினைவு தினமான இன்று அவரை சந்தித்து பேசியதை செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பிறகு அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் ஆகியோரின் கட்டுப்பாட்டில் வந்தது.

அதன் பின் 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் துக்க நாளாக டிசம்பர் 5-ஆம் திகதியை அனுசரித்து வருகிறார்கள். இதில் ஜெயலலிதாவின் இழப்பை துக்கமாக அனுசரிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் ஆகியோர் டுவிட்டரில் ஒரே புரொபைல் பிக்சரை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்தித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் அவர் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததார்.

நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்று ஜெயலலிதா கூறினார். இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்