ஷூ-வுக்குள் பாம்பு இருப்பது தெரியாமல் கையை நுழைத்து சுத்தம் செய்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையை சேர்ந்த பழனி (38) என்பவரின் மனைவி சுமித்ரா (35). இவர் நேற்றைக்கு முன்தினம் இரவு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
கழிப்பறையில் இருந்த ஷூவை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கும் போது உள்ளிருந்த விஷப்பாம்பு அவரது கையில் தீண்டியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.