இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், இயக்குனர் டேனியல் சர்வானின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன் லொறி டிரைவர் மற்றும் கிளீனர் என நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில்(மண்ணெண்ணய் உடலில் ஊற்றி தீ வைத்து) உடல் கருகி இறந்து கிடந்தார்.
இந்த சம்பவத்தால் இந்தியாவில் பெண்களின் நிலை இது தானா? குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கொடுக்க வேண்டும், அப்போது தான் பயப்படுவார்கள் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் Daniel Shravan தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், பாலியல் பலாத்காரம் என்பது தீவிரமான பிரச்னை அல்ல, ஆனால் கொலை என்பது மன்னிக்க முடியாத ஒன்று, பெண்களின் பாதுகாப்பிற்காக, பாலியல் பலாத்காரத்தை அரசாங்கம் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்பவர்களிடம் பெண்கள் ஒத்துழைத்து செல்ல வேண்டும், அதற்காக அவர்கள் ஆணுறைகளை எடுத்து செல்ல வேண்டும், நீங்கள் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், உடனே நீங்கள் ஆணுறையை அவரிடம் கொடுத்துவிடுங்கள், ஒத்துழையுங்கள் அதன் பின் எந்த ஒரு விபரீதமும் நடக்காது
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களை கடுமையாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டாலும், அது எல்லாம் இது போன்ற சம்பவங்களை தடுக்காது,
வீரப்பனை கொன்றதால், கடத்தல் கட்டுப்படுத்தப்படும், ஒசாமா பின்லேடனை கொல்வது மூலம் பயங்கரவாதம் கட்டுப்படும் என்று அரசாங்கம் நினைப்பது முட்டாள்தனம். பாலியல்பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்கள் மூலம் இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது.
அதற்கு பதிலாக, பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவேற்றத்தை அவர் நீக்கிவிட்டாலும் இணையவாசிகள் அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருவதால், Daniel Shravan மீது பயங்கரமான கோபத்தில் உள்ளனர்.