5 ஆண்களால் உயிருடன் எரிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்: மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா
1087Shares

5 ஆண்களால் கொடூரமான பாலியல் வன்புணர்வின் இருந்து தப்பிய பெண், தற்போது அதே குழுவினரால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த மார்ச் மாதம் மர்ம நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அந்த இரண்டு குற்றவாளிகள், தங்களுடைய கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்த்து, அதிகாலை 4 மணியளவில் புகார் கொடுத்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.

ஊருக்கு வெளியே கொண்டு சென்றதும், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் நிலை மோசமடைந்ததால் தற்போது லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில் கூட்டாளிகள் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்