ஜீவ சமாதிக்கு உயில் எழுதி வைத்துவிட்டேன்... நேரலையில் திடீரென்று தோன்றிய நித்தியானந்தா

Report Print Santhan in இந்தியா
1198Shares

நித்தியானந்தா வெளிநாட்டில் இருக்கும் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அங்கு தங்கிவிட்டார் என்று செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது தன்னுடைய உயிலைப் பற்றி நேரலை ஒன்றில் பேசியுள்ளார்.

இந்தியாவில் நித்தியானந்தாவிற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நடக்கும் கொடுமை என பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

சமீபத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் இளம் பெண்களை வசியப்படுத்தி தன்னுடனே இருக்கும் படி செய்வதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி பெண் பிள்ளைகளை கடத்தி சென்று அவர்களை நிதி திரட்டுவதற்கு ஒரு இயந்திரம் போன்று பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.

அது தீவிரவமானதால், நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பி ஓடி தென்அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் என்ற தீவில் இருப்பதாகவும், அந்த தீவை சொந்தமாக வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் வைத்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நித்தியானந்தா அங்கு எல்லாம் இல்லை, இமயமலையில் இருக்கிறார் என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றன. அவரை பிடிப்பதற்கு குஜராத் பொலிஸ் தீவிரவம் காட்டி வருகின்றனர்.

இதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் நித்தியானந்தா தினந்தோறும் ஏதேனும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று நேரலை வீடியோவில் வந்த நித்தியானந்தா, நான் தினமும் அண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது இணையத்தில் காட்டுகிறார்கள் அதைப் பார்க்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்தியாவில் அண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.

அப்போது நான் மூன்று கண், இல்லை இரண்டு கண் இல்லை ஒற்றை கண் மூலமாகப் பார்க்கப் போகிறேன். அதை அந்த இறைவனே முடிவு பண்ணட்டும். நான் பெற்ற கல்வி, ஞான அறிவு பெருமான் கொடுத்தது. இன்னும் பெருமான் கொடுத்த, கொடுக்கிற, கொடுக்கப்போகிற நன்மைகளை மக்களுக்குக் கொடுப்பேன்.

என் வாழ்க்கையில் திருவண்ணாமலை குரு பரம்பரை காஞ்சிபுரம் குரு பரம்பரை, மதுரை பரம்பரை உதவியாக இருந்துள்ளது.

பக்தர்கள் கொடுக்கும் பணம் இந்தியாவின் நன்மைக்கும் குருபரம்பரை நன்மைக்கும் பயன்படும். அன்றும் இன்றும் ஒரு கப் தயிர்சாதம்தான் சாப்பிடுகிறேன்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் அய்யா இருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்த நாராயணசாமி சாப்பிடாமல் மலை உச்சியில் சித்தராக வாழ்ந்தார். அந்த ஞானத்தைத்தான் இப்போது நான் உலகிற்குக் கொடுக்கிறேன் என்று கூறி முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்