பிரியங்கா உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா? சிறை அதிகாரிகளை அதிரவைத்த நான்கு பேர்

Report Print Santhan in இந்தியா
1658Shares

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் சம்பவத்தில், அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதால், உடனடியாக பிரியங்கா ரெட்டியின் மரணத்திற்கு யார் காரணம்? என்பதில் பொலிசார் தீவிரம் காட்டினர்.

அதன்படி சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பிரியங்கா எரிந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இது குறித்து பொலிசார் தரப்பு கூறும் போது, அவர் இறந்தபின் எரித்துக்கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நாங்கள் யூகிக்கிறோம். விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்கள் குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டியுள்ளனர்.

மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர்.

பெண் மருத்துவர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லொரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரிக்கத் துவங்கியுள்ளனர்.

அப்போது தான் அந்தப் பெண் உயிருடன் இருந்தது தங்களுக்குத் தெரியவந்தது என்றும், அதுவரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், முதலில் பெண் மருத்துவரை கொல்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை. பொலிசாரிடம் புகார் கொடுப்பார் என்று நினைத்தே பெண்ணைக் கொலை செய்ததாக நான்கு பேரும் கூறியுள்ளனர்.

இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த விவகாரத்தில் எதையும் சொல்ல முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்