பிரியங்கா வழக்கில் கைதானவர்களை சுட்டு கொன்றது தவறு! அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக பிரபலத்தின் பதிவு

Report Print Raju Raju in இந்தியா
1111Shares

பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் சுட்டு கொன்றது தவறு என தமிழக அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் வெளியிட்ட பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா கடந்த வாரம் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை தப்பி ஓட முயன்றதாக சுட்டு கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகர், அரசியல் விமர்சகர், தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட சுமந்த்ராமன் இந்த என்கவுண்டர் குறித்து டுவிட்டரில் பதிவிட்டார்.

அதில், இது தவறு மற்றும் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. அவர்கள் குற்றவாளிகள் என முழுவதுமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கொடுத்திருக்கலாம், இது எனக்கு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்தியாவில் நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி இன்னும் வழங்கப்படவில்லை, இது போன்ற கொடூரன்களுக்கு என் கவுண்டர் தான் சரியான தண்டனை என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்