ஹைதராபாத்தில் பிரியங்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சைபராபாத் பொலிஸ் கமிஷனரை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.
கால்நடை மருத்துவர் பிரியங்கா எரித்து கொல்லப்பட்ட இடத்தில் இன்று நான்கு குற்றவாளிகளும் பொலிசாரால் என்கவுணடரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பிக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிசார் தரப்பில் முதற்கட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த பிரியங்காவுக்கு ஒரே புல்லட்டில் நீதி வழங்கியதாக சைபராபாத் பொலிஸ் கமிஷ்னர் வி.சி.சஜ்ஜனரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

2008ம் அண்டு வாரங்கல் ஆசிட் தாக்குதல் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரைக் கொன்ற காவல்துறைக் குழுவுக்கு பொலிஸ் சூப்பிரண்டு வி.சி.சஜ்ஜனர் தலைமை தாங்கினார் என்பது நினைவுக் கூரதக்கது.
தற்போது, ஹைதராபாத் என்கவுண்டரும் வி.சி.சஜ்ஜனர் தலைமையில் நடைபெற்றுள்ளதால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
2008: Warangal Acid attack perpetrators killed in an #Encounter
— Govind Pandey (@iGovindPandey) December 6, 2019
2019: Hyderabad #DishaCase perpetrators killed in an #Encounter
Name: VC Sajjanar
Job: Delivering Justice, one bullet at a time.#JusticeForDisha pic.twitter.com/l7ebqUgMZJ
சம்பவம் இடத்தை ஆய்வு செய்த சைபராபாத் கமிஷனர் வி.சி.சஜ்ஜனர் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆரிப், நவீன், சிவா மற்றும் சென்னகேஷவுலு ஆகியோர் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை ஷாட்நகரின் சத்தன்பள்ளியில் நடந்த பொலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
நான் சம்பவயிடத்தை ஆய்வு செய்துவிட்டேன் மேலும் விவரங்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.