என்னையும் கொன்றுவிடுங்கள்! பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நபரின் கர்ப்பிணி மனைவி கதறல்

Report Print Raju Raju in இந்தியா
3005Shares

பிரியங்கா வழக்கில் கைதாகி சுட்டு கொல்லப்பட்ட நான்கு பேரின் குடும்பத்தாரும் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா கடந்த வாரம் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிசார் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்று அதிகாலை பொலிசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்ப முயற்சித்ததால் என் கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது குறித்து முக்கிய குற்றவாளி முகமது பாஷாவின் தாய் கூறுகையில், என் மகன் போய்விட்டான், இது தவறு தான்.

இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என கூறினார்.

சிறுவனான ஷிவாவின் தாய் கூறுகையில், என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டும் அவனை கொல்லுங்கள் என அழுதபடி கூறினார்.

ஷிவாவின் தந்தை கூறுகையில், அது ஏன் இந்த வழக்கில் மட்டும் நால்வருக்கும் இது போன்ற தண்டனை கொடுக்கப்பட்டது?

இதே போல மற்ற வழக்குகளிலும் தண்டனை தர வேண்டும் என கூறினார்.

அதே சமயம் நவீன் தந்தை கூறுகையில், நான் ஏற்கனவே கூறியதை போல என் மகன் உள்ளிட்ட நால்வரையும் சிறையில் அடைக்காமல் முதலிலேயே கொலை செய்திருக்க வேண்டும்.

ஆனால் கடைசியாக ஒரு முறை மகனை பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என கூறினார்.

சின்னகேசவலுவின் தாய் ஜெயம்மா முன்னர் அளித்த பேட்டியில், என் மகன் மீது தவறு நிரூபனமானால் அவனையும் எரித்து கொல்ல வேண்டும் என கூறிய நிலையில் தற்போது கருத்து கூறவில்லை.

ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் சின்னகேசவலுவின் மனைவிக்கு கணவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழுது கொண்டே பேசிய அவர், எங்களுக்கு திருமணமான ஒரு வருடத்துக்குள் என் கணவர் என்னை விட்டு போய்விட்டார்.

அவர் சுட்டு கொல்லப்பட்ட இடத்துக்கு என்னையும் அழைத்து சென்று கொலை செய்து விடுங்கள், அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கதறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்