என்கவுண்டர் செய்த இடத்தில் பட்டாசு வெடித்து.. இனிப்புகள் வழங்கி திருவிழாவாக கொண்டாடும் மக்கள்: வெளியான வீடியோ

Report Print Basu in இந்தியா
418Shares

ஹைதராபாத்தில் நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் கூடிய உள்ளுர் மக்கள், பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளிவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடர்பில் நான்கு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இந்நிலையில், இன்று காலை குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் நடந்ததை செய்து காட்ட சம்பவயிடத்திற்கு கொண்ட செல்லப்பட்டுள்ளனர்.

அப்போது, நான்கு பேரும் தப்பிக்க முயன்றதாகவும், அவர்களை சுட்டுக்கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அடுத்து என்கவுண்டர் நடத்தப்பட்ட ஷாட்நகரில் உள்ள பகுதிக்கு விரைந்த உள்ளுர் மக்கள் பொலிசாரை புகழ்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், பூக்கள் துவி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கைதாட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ‘நீதி வழங்கப்பட்டுள்ளது’ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இணையத்தில் ஒருபுறம் இந்த என்கவுண்டர் சரியா? தவறா? என விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பலர், நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததால் என்கவுண்டரை கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு தரப்பினர், இது போன்ற என்கவுண்டரால் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும், கல்வி மூலமே இதை சரிசெய்ய முடியும் என விவாதித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்