பிரியங்காவுக்கு கிடைத்த நீதி என் மகளுக்கும் வேண்டும்! என் கவுண்டர் செய்யும் படி தாய் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா
473Shares

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இதே போன்று தன் மகளுக்கும் நடந்திருப்பதாகவும், இதற்கு காரணமான நபரை தண்டிக்கும் படி கண்ணீர் வடித்துள்ளார்.

ஹைதரபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை பொலிசார் என் கவுண்டர் செய்தது தான் இப்போது இந்திய ஊடகங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கானா பொலிசாரை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சீமா சிங் என்பவர் தன்னுடைய மகளான Sara Sing அரசியல்வாதியான amanmani tripathi என்பவரால பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அந்த நபர் இப்போது சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறான். இதனால் தயவு செய்து இந்தியர்கள் அம்மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்தாயவுக்கு அழுத்தம் கொடுங்கள், உத்திரபிரதேச பொலிசார் அவரை என்கவுண்டர் செய்யுங்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்