இந்தியாவில் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் படி உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஹதரபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான, முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதை இந்திய மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் இது தான் சரியான தண்டனை, அந்த பெண்ணுக்கு கிடைத்த நீதி என்று கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெலுங்கானா அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 பேரும் கொல்லப்பட்டது எப்படி? என்ன நடந்தது? என்று விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் ஹைதராபாத் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிரான வழக்கில் எவ்வளவு விசாரணை இதுவரை நடத்தப்பட்டுள்ளது? இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் 4 பேரும் எப்படி குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்? வாக்குமூலம் தவிர வேறு என்ன ஆதாரங்கள் இருக்கிறது? என்ன மாதிரியான மருத்துவ ஆதாரங்கள் இருக்கிறது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் என்கவுண்டரில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதிகாலை 3.30 மணிக்கு பொலிசார் குற்றவாளிகளை கொண்டு சென்றது ஏன்? ஏன் கையில் விலங்கு இல்லாமல் பொலிசார் அவர்களை அழைத்து சென்றனர் என்றும் கேள்வி எழுந்துள்ளது.