பிரியங்கா விவகாரம்! என் ஆட்சியிலும் இதே தான் நடக்கும்.. சீமான் அதிரடி பேட்டி

Report Print Santhan in இந்தியா

தெலுங்கானாவின் கொலை செய்யப்பட்ட பிரியங்கா விவகாரத்தில், என்ன நடந்ததோ அதே தான் என்னுடைய ஆட்சியிலும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் நான்கு பேரை பொலிசார் என் கவுண்டர் செய்த சம்பவம் தான், இப்போது இந்திய ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதை வரவேற்கின்றனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர் என்று கேட்கப்பட்டது.

அதற்கு சீமான், இதை நான் வரவேற்கிறேன், மரணம் என்பது எந்த ஒரு குற்றத்திற்கும் தீர்வாகாது என்று போராடுபவர்கள் நாங்கள், ஆனால் அதுவே பெண்களை ஒரு போதை பொருளாக பயன்படுத்தி, அவர்களை வன்புனர்வு செய்யும் செயலுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சிறந்த தண்டனையாக இருக்க முடியாது.

ஏனெனில் பொள்ளாச்சியில் ஒரு மிகப் பெரிய சம்பவம் ஒன்று நடக்கிறது, அதில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் 90 நாட்களுக்குள் பெயில் பெற்று வெளியில் வந்துவிடுகின்றனர். இது எல்லாம் மிகப் பெரிய கொடுமை.

இப்போது எப்படி ஒரு என்கவுண்டர் நடந்திருக்கிறதோ, அதே போன்று இது போன்று சம்பவத்தில் ஈடுபடுவர்களை மக்கள் முன்பு வைத்து சுட்டால் தான் ஒரு வித பயம் வரும், மரணம் ஒன்று தான் இது போன்ற கொடூரர்களை அறிவுறுத்தி கொண்டே இருக்கும், சரியான தண்டனை இல்லையென்றால் குற்றம் குறையாது.

தெலுங்கானாவின் இந்த செயலை நான் முழு மனதாக வரவேற்கிறேன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதே தான் செய்வோம், பாலியல் குற்றத்திற்கு ஒரே தண்டனை இது தான், 6 வயது குழந்தையை ஒருவன் வன்புனர்வு செய்து, கொலை செய்கிறான் என்றால், அவனை தண்டிக்காமல் ஜெயிலில் அடைத்து கொண்டாடுவது, அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்