பட்டபகலில் 5 பேரால் உயிருடன் கொளுத்தப்பட்ட இளம்பெண்: நாட்டை உலுக்கிய சம்பவத்தில் சோக முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் சிகிச்சைபெற்று வந்த பாலியல் வன்புணர்வுக்கு இரையான இளம்பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரத்திற்கு இரையானார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இருவர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நீதிமன்றம் செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து தாக்கியதுடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த பெண் மரணமடைந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண்ணுக்கு இரவு 11.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய தீவிரமாக முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், இதனால் அவர் இரவு 11.40 மணியளவில் மரணமடைந்தார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்