மனைவியுடன் இலை அறுக்க சென்றவரை அரிவாளால் வெட்டி சாய்த்த 23 வயது பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

முன்விரோதம் காரணமாக கணவருடன் சேர்ந்துக்கொண்டு, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30) - நிரஞ்சனா (25) என்கிற தம்பதியினருக்கும், மணிகண்டன் - ராஜேஸ்வரி என்கிற தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், மணிகண்டன் தன்னுடைய மனைவியுடன் இலை அறுப்பதற்காக சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிரே வந்த பாண்டீஸ்வரன் - நிரஞ்சனா தம்பதியினர், மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

Oneindia

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, நிரஞ்சனா அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தின் போது தடுக்க முயன்ற ராஜேஸ்வரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக, பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா தம்பதியினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்