உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பெண்... பள்ளம் தோண்டிய தொழிலாளர்களுக்கு காத்திருந்த திருச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

வறுமையின் காரணத்தால் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியாமல் மனைவியை உயிருடன் புதைத்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோவா மாநிலத்தை சேர்ந்த துக்காராம் ஷெட்காங்கர் (46) என்பவரின் மனைவி தன்வி (44), நீண்ட நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார்.

அன்றாட கூலித்தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே மனைவியின் சிகிச்சையையும், தனது 14 வயது மகனின் படிப்பு செலவையும் கவனித்து வந்துள்ளார்.

இருந்தாலும், தினமும் உடல்நலக்குறைவுடன் போராடும் மனைவிக்கு போதிய சிகிச்சையளிக்க பணமில்லாத காரணத்தால், அவரை கொலை செய்ய துக்காராம் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தன்னுடைய மனைவியை பக்கத்து கிராமத்திற்கு அழைத்து சென்று, ஒரு கால்வாய் அருகே உயிருடன் புதைத்துவிட்டு, அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்துள்ளார்.

இதற்கிடையே நீர்பாசனத்திட்டத்திற்காக அங்கு வந்த தொழிலாளர்கள் சிலர் குழிதோண்டும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனை பார்த்து பதறிப்போன துக்காராம், பள்ளம் தோண்ட வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல், குழிதோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. முதல் பக்கெட்டில் மணல் அள்ளி கொட்டியதும் இரண்டாவது பக்கெட்டிற்காக இயந்திரம் உள்ளே சென்றுள்ளது.

அப்போது பெண் ஒருவரின் சடலம் தட்டுப்படுவதை பார்த்த தொழிலாளிகள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், தன்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, பொருளாதார பற்றாக்குறை காரணமாகவே மனைவியை உயிருடன் புதைத்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் துக்காராம் மீது கொலை வழக்கு பதிவு செய்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்