அந்த சட்ட திருத்தம் கொண்டு வாருங்கள்: பிரியங்காவின் சகோதரி உருக்கமான கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஐதராபாத் நகரில் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்காவின் சகோதரி அரசுக்கும் சட்ட நிபுணர்களுக்கும் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஐதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட நிலையில்,

குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட நால்வரை பொலிசார் தப்பிச் செல்ல முயன்றதாக கூறி சுட்டுக் கொன்றனர்.

குறித்த விவகாரம் நாடு முழுவதும் வரவேற்பையும் அதேவேளை கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டது.

இந்த நிலையில், பிரியங்காவின் சகோதரி அரசுக்கும் சட்ட நிபுணர்களுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில், வன்புணர்வு குற்றங்களில் குற்றவாளிகளுக்கு பிணை அளிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும்,

இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் எனவும் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

இதுபோன்ற குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், நீதி விரைவில் கிடைக்க நீதித்துறை ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிதியில் பாலியல் வன்புணர்வுக்கு இரையான பெண், பிணையில் வெளியான குற்றவாளிகளால் எரித்து கொல்ல முயன்றதும்,

சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததும், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரியங்காவின் சகோதரி முன்வைத்துள்ள இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்