புதையல் ஆசை: வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபர்

Report Print Vijay Amburore in இந்தியா

வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் கூறியதை கேட்டு 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் (62) என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், 3 அடி அகலத்தில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்து மோகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

polimer

அதற்கு அவர், வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறியதை கேட்டு பள்ளம் தோண்டியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளத்தை மூடுமாறு உத்தரவிட்ட அதிகாரிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்