டெல்லியின் காற்று மாசுபாடை விட... மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளியின் எகத்தாளம்

Report Print Arbin Arbin in இந்தியா

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான அக்ஷய் சிங் தாக்கூர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசுபாடை கேலி செய்வது போல கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, டெல்லியில் பேருந்து ஒன்றில் வைத்து இளம்பெண் நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில்,

4 பேருக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து, குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் ஒரு குற்றவாளியான அக்ஷய் சிங் தாக்கூர் தனது மனுவில், டெல்லி மாசு பற்றி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி பல நாடுகளில் மரண தண்டனை அகற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி என்.சி.ஆர் மற்றும் மெட்ரோ நகரத்தில் காற்றின் தரம் எரிவாயு அறைக்குள் உட்கார்ந்து இருப்பதை போன்றது என்பதை இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்,

டெல்லி என்.சி.ஆர் நகரத்தின் நீரும் விஷத்தால் நிறைந்துள்ளது. டெல்லியில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த காற்று மாசு காரணமாக, ஆயுள் குறுகியதாக உள்ளது, பிறகு ஏன் எங்களுக்கு மரண தண்டனை?

தற்போதைய சூழலில் சராசரி ஆயுட்காலம் 50 முதல் 60 ஆண்டுகளாக குறைந்துள்ளது. எனவே மரண தண்டனை தனியாக விதித்திருப்பது தேவையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் டெல்லி அரசும் இந்திய அரசும் குறித்த குற்றவாளிகள் நால்வரின் கருணை மனுவை நிராகரித்திருந்தன.

மட்டுமின்றி ஜனாதிபதியும் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையிலேயே,

குற்றவாளிகள் நால்வரும் சீராய்வு மனு அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்