நான்கு முறை திருமணம்... மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனைவியை கொலை செய்து திரைப்பட பாணியில் சடலத்தை மறைவு செய்த கணவன் மற்றும் அவரது காதலியை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் சேர்த்தல பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பில் தமது முன்னாள் காதலியை சந்தித்துள்ளார்.

ஏற்கெனவே வித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவரும் பிரேம்குமார், தமது மனைவி தம்மை ஏமாற்றி வருகிரார் என்ற சந்தேகத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

மட்டுமின்றி வித்யா இதற்கு முன்னர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரேம்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், தமது முன்னாள் காதலியான சுனிதாவை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக புது வாழ்க்கையை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், சுனிதா தமது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை விட்டுவிட்டு, பிரேம்குமாருடன் வாழ ஐதராபாத் நகரில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இதனையடுத்து தன்னை ஏமாற்றிய மனைவி வித்யாவை கொலை செய்ய திட்டமிட்ட பிரேம்குமார், காதலி சுனிதாவுடன் இணைந்து அதை செயல்படுத்தியுள்ளார்.

ஆனால் வித்யா இருமுறை மட்டுமே திருமணம் செய்து கொண்டதாகவும், முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தற்போது கோவா மாநிலத்தில் கல்வி பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே ஆயுர்வேத சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி மனைவியுடன் சென்ற பிரேம்குமார், மது கலந்த பழச்சாறு அளித்து, பின்னர் கழுத்தை நெரித்து வித்யாவை கொன்றுள்ளார்.

சடலத்தை தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைவு செய்துள்ளனர். தொடர்ந்து திரைப்பட பாணியில், வெளிமாநிலம் செல்லும் ரயில் ஒன்றில் வித்யாவின் மொபைலை கைவிட்டுள்ளனர்.

இதன் பின்னர் பொலிசாரிடம் தமது மனைவி வித்யா மாயமானதாக கூறி புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில், வித்யாவின் மொபைல் வெளிமாநிலத்தில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டதால், அவர் கோவாவில் இருக்கும் தமது மகனை காண சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் அதன்பின்னர் பிரேம்குமாரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் அவரையும் சுனிதாவையும் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது. தற்போது வித்யாவின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து வருகிரது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்