பிரியங்கா மேடையில் ஏறி பேசியதாக வைரலாகும் வீடியோ! அது தொடர்பில் வெளியான உண்மை தகவல்

Report Print Raju Raju in இந்தியா

விழா ஒன்றில் பிரியங்கா ரெட்டி விருதை பெற்று மேடையில் ஏறி பேசுவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அது பிரியங்காவே கிடையாது என தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) கடந்த மாதம் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் கைதான நால்வரும் பொலிசாரால் என் கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் நேற்று ஒரு வீடியோ வைரலானது.

அதில் விருது வழங்கும் விழாவில் விருதை பெறும் இளம்பெண் பின்னர் மேடையில் தோன்றி பேசுகிறார்.

அந்த பெண் பிரியங்கா ரெட்டி எனவும், அவரின் மரணம் ஒரு மருத்துவரின் முடிவு மட்டுமல்ல, சிறந்த விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளரும் காமத்துக்காக பலியாக்கப்பட்டார் என்ற தலைப்புடன் அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது பிரியங்கா ரெட்டி இல்லை எனவும், அவர் பெயர் திவ்யா ரெட்டி எனவும் உறுதியாகியுள்ளது.

அதாவது பிரியங்காவின் வயது 26 என்ற நிலையில் திவ்யாவின் வயது 35 ஆகும்.

மேலும் பிரியங்கா திருமணமாகாதவர், ஆனால் வீடியோவில் பேசிய திவ்யா தனது கணவர் கவுதம் ரெட்டி என்ற பெயரை குறிப்பிட்டார்.

அதே சமயம் திவ்யாவும் தெலுங்கானாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்