இலங்கை தமிழர்கள் இணைக்கப்படாதது ஏன்? டுவிட்டரில் கமல்ஹாசன் சரமாரி கேள்வி

Report Print Raju Raju in இந்தியா

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில், சுமார் ஒன்பது மணி நேரம் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவையில் ஆளும் பாஜக அரசு அசுர பலத்துடன் இருப்பதால், வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிலிருந்து இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களும் விடுப்பட்டது ஏன்?

இது வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்பட்ட மசோதா அல்ல என்றால், இலங்கைத் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...