ஷூவை கழட்டி அடித்து வெளுத்த ஆன்டி ரோமியோ பெண்! தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் புதிய படை

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் சூழலில் சிறுமிகளை தொந்தரவு செய்த நபரை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சாலையிலேயே தண்டித்துள்ளார்.

இந்தியா முழுவதும் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்டி ரோமியோ படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த படை பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் வரம்பு மீறி நடப்பவர்களை பிடித்து தண்டனை வாங்கி கொடுக்கும்.

இந்நிலையில், கான்பூர் பகுதியில் பள்ளி சென்ற மாணவிகளை சில நபர்கள் தொந்தரவு செய்ததாக ஆன்டி ரோமியோ படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஆன்டிரோமியோ படையினர், அப்பகுதி சிறுமிகளை மோசமான வார்த்தைகளால் பேசியதை கண்டறிந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். பின் அந்த படையின் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் சாலையிலேயே ஷூவை கழற்றி சரமாரியாக தாக்கினார்.

இதை நேரில் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகலைதளங்களில் பதிவிட்டு அந்த பெண் அதிகாரிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்