நான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தந்தையை மகள் கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில், விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ரெபெல்லோ (59) என்ற இசை கலைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தெருவில் அனாதையாக சுற்றி திரிந்த ஆராதியா பாட்டில் (19) என்ற பெண்ணை தத்தெடுத்து தன்னுடைய அரவணைப்பில் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணிற்கும் , அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த நட்பு, நாளடைவில் இது காதலாகவும் மாறிய நிலையில், ஆராதியா தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக வெட்டியும், எரித்தும் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து நடத்திய விசாரணையில், தந்தையை கொலை செய்வதற்கு முன், ஆராதி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அதில், அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளே என்னை மன்னியுங்கள். நான் மிகவும் தவறான பெண் என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் தனது கைப்பட எழுதியுள்ளார்.

அதன் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து தந்தையையை தலையில் அடித்து வீழ்த்திய அவர் காதலனுடன் சேர்ந்து பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உயிர் பிரிந்ததை உறுதி செய்த அவர்கள் இறந்த சடலத்தை அவரது வீட்டு கழிவறையில் மூன்று நாட்களாக வைத்து வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் பிணத்தின் கால்களை ஸ்டவ் மீது வைத்தும் எரித்துள்ளனர். பிறகு உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அதை மிதி ஆற்றின் ஓரம் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசாருக்கு சூட்கேசில் இருந்த உடல் பாகங்களில் ரெபெல்லோ அணிந்திருந்த சட்டையில் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையின் அடையாளம் இருந்துள்ளது. அதனை வைத்துதான் மும்பை பொலிசார் ஆராதியா பாட்டில் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலனையும் கைது செய்தனர்.

அப்போது, தனது தந்தை நீண்ட நாட்களாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை செய்ததாக ஆராதியா பாட்டில் கூறியுள்ளார்.

ஆனால் பொலிசாரோ அப்படி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, கொலைக்கான காரணத்திற்கு பெண்ணின் காதலன் தந்த யோசனைதான் அது என்று கூறி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்